‘கீரித்தலையன்’னு என்பேர கிண்டல் பண்ணான்’! ‘அதான் கோபத்துல..!’ சென்னையில் கொத்தனார் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 29, 2019 03:25 PM

தன்னுடைய பெயரை கூறி கிண்டல் செய்ததற்காக கொத்தனார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man arrested by police who killed co worker in Chennai

சென்னை கே.கே நகர் பகுதியில் உள்ள ப்ளாட்ஃபார்ம் அருகே தங்கி ராபர்ட் மற்றும் கீரித்தலையன் என்ற இருவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலை முடிந்து இருவரும் இரவு இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கீரித்தலையன் தனது கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து ராபர்ட்டை குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த ராபார்ட் பரிதாபமாக பலியாகியுள்ளார். உடனே கீரித்தலையன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ராபர்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த கீரித்தலையனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய கீரித்தலையன் என்ற பெயரை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : #CRIME #MURDER #KILLED #POLICE #CHENNAI