6 பந்துகளில் ‘5 விக்கெட்’.. ‘மாஸ்’ காட்டி தெறிக்கவிட்ட இந்திய வீரர்.. ‘வரலாற்று சாதனை’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 29, 2019 10:43 PM

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Video Abhimanyu Mithun Picks 5 Wickets In 6 Balls

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா - கர்நாடகா அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களைக் குவித்தது. ஹரியானா அணி 19வது ஓவர் வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கடைசி ஓவர் பந்து வீசிய அபிமன்யு மிதுன் முதல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளையும், 6வது பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். அதற்கு முன்னரே 3 ஓவர்கள் பந்து வீசிய அபிமன்யு விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில் கடைசியாக ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ராஞ்சி கோப்பை, சையது முஸ்தாக் அலி, விஜய் ஹாசரே என 3 உள்ளூர் தொடர்களிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா ப்ரீமியர் லீக் தொடர் மேட்ச் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கியுள்ள அபிமன்யு மிதுனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களுர் போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #KARNATAKA #SYEDMUSHTAQALITROPHY #ABHIMANYUMITHUN #WICKET #RECORD #VIDEO