'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க?.. அது சரி நம்பர் எங்க?'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 23, 2019 10:46 AM

தெலுங்கானாவில் ஜீடிமெட்லா என்கிற பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

car with \'AP CM JAGAN\' written on it, case registered

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றில் நம்பர் பிளேட் இருக்க வேண்டிய இடத்தில் நம்பர் பிளேட் இருந்தது, ஆனாலும் அதில் காரின் 4 இலக்க நம்பர்கள் எழுதப்பட்டிருக்கவில்லை. 

அதற்கு மாறாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை குறிக்கும் விதமாக AP CM JAGAN என்று எழுதியிருந்தது. அதாவது ஆந்திர பிரதேச முதல் அமைச்சர் ஜெகன் என்பதன் ஆங்கிலச் சுருக்கெழுத்துக்கள் அங்கு இருந்துள்ளன.

இதனைக் கண்ட போலீஸார் வாகன தணிக்கை செய்யும் பொருட்டு, வாகன ஓட்டி மீது வழக்குப்பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : #TRAFFIC #ANDHRAPRADESH #HYDERABAD #TELANGANA #CASE