' ஐபிஎல்'ல இனி ஒவ்வொரு டீமுக்கும்.. '11 பேர்' கெடையாது.. அதுக்கும் மேல.. கசிந்த தகவல்.. செம அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 04, 2019 08:24 PM
ஐபிஎல் தொடரால் கிரிக்கெட் மாறிவிட்டது என கூறப்பட்டாலும், கிரிக்கெட் போட்டியின் அடிப்படை விதியை மாற்ற ஐபிஎல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் திட்டமிடலில் பிசிசிஐ தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.
![15 players instead of 11 per team in IPL 2020?, Read Here 15 players instead of 11 per team in IPL 2020?, Read Here](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/15-players-instead-of-11-per-team-in-ipl-2020-read-here.jpg)
அதன்படி இனி ஒவ்வொரு டீமிலும் 11 பேருக்கு 15 பேரை அணியினர் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் படி ஒரு அணி 11 வீரர்களை அறிவிக்காமல், 15 வீரர்கள் கொண்ட அணியை போட்டிக்கு முன்பாக அறிவிக்கும். போட்டியின் இடையே தேவைப்படும் இடங்களில் மாற்று வீரரை கேப்டன் களமிறக்கிக் கொள்ளலாம்.
அதாவது கடைசி ஓவரில் 20 ரன்கள் அணிக்கு தேவைப்படுகிறது என்றால் ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரை கடைசி ஓவரில் அணியினர் இறங்க சொல்லலாம். அதேபோல கடைசி ஓவரில் 6 ரன்களை எதிரணிக்கு விட்டு கொடுக்காமல் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற சூழல் எழுந்தால் பும்ரா போன்ற வீரர் ஒருவரை இறக்கி விடலாம்.
இவர்கள் பவர் பிளேயர் என அழைக்கப்படுவார்களாம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ரசிகர்களை பெரியளவில் ஈர்க்கும், அணிகளின் திட்டமிடலும் முழுதாக மாறும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ஏற்கனவே பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதனால், 2020 ஐபிஎல் தொடரில் இந்த புதிய திட்டத்தை எளிதாக அமல்படுத்தலாம் எனவும் தெரிகிறது.
முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன் உள்ளூர் டி20 போட்டியான முஷ்டாக் அலி திட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தி பார்க்கலாம் என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும், முன்னதாக விரைவில் நடைபெறவுள்ள ஐபிஎல் கூட்டத்தில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கலந்து ஆலோசிப்பார்கள் எனவும் தெரிகிறது.
பிசிசிஐ ஒப்புதல் அளித்தாலும் அணிகள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை அணிகள் எதிர்க்கும் பட்சத்தில் வரும் தொடரில் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)