‘கொரோனாவால்’.. ‘கறிக் கோழிக்கு’ வந்த புது சோதனை.. ‘இப்படியே போச்சுனா’.. கதறும் விற்பனையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கறிக்கோழி வழியாக கொரோனா பரவும் என்று சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிய வதந்தியால், கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளன.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், கறிக்கோழி வழியாக கொரோனா வைரஸ் பரவும் என்று கூறப்படும் வதந்திகள் உருவாகின. எனினும் இன்னும் இந்தத் தகவல் உறுதிசெய்யப்படாத நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்திய கோழிப் பண்ணை தொழிலில் சுமார் 1,310 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சராசரியாக 70 ரூபாயக இருந்த ஒரு கிலோ கோழியின் பண்ணை விலை, கொரோனா புரளிக்கு பின்னர் கிலோவுக்கு 35 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோழி விற்பனை இந்த நிலையிலேயே நீடித்தால், வரும் ஏப்ரலில் இருந்து கோழியின் விலை அதிகரிக்கும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags : #CORONAVIRUSINDIA #CHICKEN
