darbar USA others

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 13, 2020 12:20 PM

1. களியக்காவிளை எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சப்ளை செய்தவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil News Important Headlines Read Here For More January 13

2. சபரிமலை வழக்கில், "சீராய்வு மனுக்களை மட்டும் விசாரிக்கப் போவதில்லை. கோயில், மசூதி உள்ளிட்ட தளங்களுக்கு பெண்கள் செல்வது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்ததா என்பது குறித்து கேட்டறிய உள்ளோம்" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

3. பேச்சு வார்த்தைக்குத் தயார் என ஈரான் கூறியிருந்த நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானத்தள முகாம்மீது 8 ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளன.

4. பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற ஜனவரி 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

5. பிலிப்பைன்ஸில் டால் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 286 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

6. செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்ட பரிசுத்தொகையாக கிடைத்த 62,300 ஆஸ்திரேலிய டாலர்களை  காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்க முன்வந்துள்ளார்.

7. நியூசிலாந்து உடனான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

8. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணைக்கு வந்த 35 பேருக்கும் மீண்டும் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

9. தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

10. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வரும் நிலையில் மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11. இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ராணி எலிசபெத் அரச குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

12 . கும்பகோணத்தில் வங்கி பயிற்சிக்கு சென்ற பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 5 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

13. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளது.

Tags : #CRIME #CRICKET ##WOMENINSABARIMALA #RAIN #KERALA #RAPE #PONGAL #IRAN #US #TN #CM #TNPSC