'பொழைக்க வந்த இடத்துல...' 'வடமாநில இளைஞருக்கு நடந்த கொடூரம்!'... 'விசாரனையில் போலீஸ் அதிர்ச்சி'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 15, 2020 05:31 PM

கட்டட வேலை செய்த வந்த வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

A North Indian guy killed by colleagues over salary issues

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருபவர், கமல்தாஸ். இவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருடன் ஐந்து பேர் கட்டட வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி வளாகத்திற்குள், உயிரிழந்த நிலையில் கமல்தாஸ் கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசார், கமல்தாஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கமல்தாஸ் உடன் தங்கியிருந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், அவருடன் தங்கியிருந்த அமர்சிங் மற்றும் போவேந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கொலை குற்றத்தை ஒப்புக் கொண்ட இருவரும், சம்பளப் பிரச்சனையில் கமல்தாஸுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவரை அடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடுபுழா சிறையில் பின்னர் அடைக்கப்பட்டனர்.

Tags : #CRIME #KERALA #ASSAM #LABOUR