தலை, முகத்தில் ‘கல்லால்’ அடித்து கொடூர கொலை..! தடயமாக சிக்கிய ‘பைக் சாவி’.. கன்னியாகுமரி அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 11, 2020 06:21 PM

கன்னியாகுமரி அருகே அடையாளம் தெரியாத வகையில் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

45 year old man found dead inside forest near kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வட்டவிளையில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற சிலர் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் கிடந்த இருசக்கர வாகனத்தின் சாவி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கல்லால் அடித்து முகம் சிதைந்துள்ளதால், முதலில் அவர் யார் என கண்டுபிடித்த பிறகே கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #POLICE #KANYAKUMARI