'எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க பாஸ்'... 'பாட்டு பாடி அசத்தும் நாய்'... பலரையும் கவர்ந்த வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'தேரி மேரி கஹானி' பாடலை நாய் ஒன்று பாடுவது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள ராணாகாட் ரயில் நிலையத்தில் அமர்ந்து பாடி, தனது வசீகர குரலால் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தவர் ரானு மோன்டால். இவர் பாடிய லதா மங்கேஷ்கரின் `ஏக் ப்யார் கா நக்மா ஹை' பாடல் இந்திய அளவில் வைரலானது. பல மில்லியன் மக்கள் அந்த பாடலை கேட்டு அசந்து போனார்கள். அதன் பின்னர் பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தன்னுடைய படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கினார்.
இதையடுத்து "ஹாப்பி ஹார்டி அன்ட் ஹீர்' திரைப்படத்தில் தேரி மேரி கஹானி என்றப் பாடலை ரானு மோன்டால் பாடி அசத்தினார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரானு மோன்டால் பாடிய தேரி மேரி கஹானி பாடலை வீட்டில் இருக்கும் ஒருவர் பாட, அவரின் வளர்ப்பு நாயும் உடன் சேர்ந்து பாடுகின்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
