‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jan 15, 2020 03:33 PM
மும்பையில் ஆசிரியை ஒருவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியையான யாஷ்மிதா (37) என்பவர் கணவர் மற்றும் 2 மகன்களுடன் பாண்டுப் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை யாஷ்மிதா வீட்டை விட்டு வெளியே கிளம்ப பார்க்கிங் வந்தபோது, அவருக்காக காத்திருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் அந்த நபர் தான் வைத்திருந்த சுத்தியலால் யாஷ்மிதாவின் தலையில் ஓங்கி அடிக்க, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தக் கட்டிடத்தின் காவலாளி அந்த நபரைப் பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து படுகாயமடைந்திருந்த யாஷ்மிதா அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளின் உதவியுடன் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில், யாஷ்மிதாவைக் கொலை செய்த நபர் அவருக்கு நன்கு அறிமுகமான ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கிஷோர் சாவந்த் (40) என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.
இதற்கிடையே இரவு 8 மணியளவில் தான் வசித்து வரும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற கிஷோர், அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் படுகாயமடைந்த அவரை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கிஷோர் ஏன் யாஷ்மிதாவைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.