அசுர வேகத்தில்.. பெண் 'என்ஜினியர்' மீது மோதி.. இழுத்துச்சென்ற பேருந்து .. பதற வைக்கும்.. 'சிசிடிவி' காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 26, 2019 06:03 PM

ஸ்கூட்டியில் சென்ற பெண் இன்ஜினியர் மீது மோதி பேருந்து அவரை இழுத்து செல்லும், சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.

Techie crushed to death by TSRTC bus in Hyderabad,CCTV

பிரபலமான தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சோகினி சக்சேனா(24) என்பவர் இன்று காலை ஹைதராபாத் பகுதியில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ்(12) ரோட்டில் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்றிருக்கிறார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர்மீது மோதி, அவரை தரதரவென இழுத்து சென்றது. இதில் சோகினி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இதைக்கண்ட பொதுமக்கள் அந்த பேருந்தை ஓட்டிவந்த டிரைவரை அடித்து உதைத்தனர். தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கு பதில் மாற்று டிரைவர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதுதான் அந்த பெண்ணின் மரணத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

ஏனெனில் டிரைவர் அந்த பேருந்தை படுவேகமாக இயக்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் பேருந்து அந்த பெண்ணை இழுத்துச்சென்ற காட்சிகளும் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.