இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 26, 2019 12:05 PM
1. டிசம்பர் 1 முதல் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2. பாஜகவின் குதிரை பேர முயற்சி தோல்வி அடைந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.
3. தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு சுமார் 1141 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 17-ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
4. வெறும் 78 மணி நேரத்திற்குள் மகாராஷ்டிராவின் முதல்வர் பதவியை தேவேந்திர பட்நாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.
5. தமிழக மருத்துவ துறைக்கு, லேப் டெக்னீஷியன்-||| என்ற பணிக்கு 1,508 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
6. நோக்கியா ஆலை மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 60 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
7. அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டமில்லை என சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
8. திண்டிவனம் அருகே பிரமாண்டமான உணவு பூங்கா அமைக்கப்படவுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
9. அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்; மேலும் 1 கிலோ பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
10. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
