'மனித' எலும்புகளால் ஆன 'கோட்டைச்' சுவர்... 'மிரண்டு' போன 'ஆய்வாளர்கள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 19, 2020 05:50 PM

பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

The discovery of a 500 year old wall made of human bones

கெண்ட் நகரில் உள்ள செயின்ட் பாவோ தேவாலயத்தில் இந்தச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புகளுக்கு பல்வேறு காரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சடலங்களைப் புதைக்க அதிக இடம் தேவைப்பட்டதால் கல்லறையில் இருந்து இந்த எலும்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அவற்றை தூக்கி எறிய முடியாததால் எலும்புகளை வைத்து ஒரு சுவரை உருவாக்கி இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் அவ்வளவு எலும்புக் கூடுகளை ஒரே இடத்தில் பார்ப்பது காண்போர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BELGIUM #BONE WALL #DISCOVER #ARCHAEOLOGISTS