‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 11, 2019 09:09 AM

சென்னை பல்லாவரம் அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர், தன்னுடன் கூட படிக்கும் மாணவரை வெட்டும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

college students attacked each other in chennai video

சென்னை மேடவாக்கத்தில் வசித்து வரும், கார்த்தி என்ற இளைஞர், தனியார் சட்டக் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செல்வாக்கு உள்ளது போன்று காட்டி வந்தததாகக் கூறப்படுகிறது. இவரை உதாசீனப்படுத்தி வந்ததாகக் கூறப்படும், அதே கல்லூரியில் படித்து வரும், கடலூரைச் சேர்ந்த அஸ்வின் என்ற மாணவருக்கும் இந்த சம்பவத்தால், முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கல்லூரி முடிந்து, கல்லூரி வளாகத்தின் வெளியே, திடீரென, மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த, பட்டாக் கத்தியை எடுத்து கார்த்தி, அஸ்வினை தாக்கியதாகத் தெரிகிறது. அதில் அஸ்வின் கை, கால், கழுத்து உள்பட பல இடங்களில் வெட்டுப்பட்டு, தனியார் மருத்துவமனையில் 2 விரல்கள் துண்டிக்கப்பட்டநிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் ‘புதிய தலைமுறை சேனலில்’ வெளியிடப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #STUDENTS #VIDEO