'இப்டியா டிரஸ் பண்ணுவாங்க'... 'நடுரோட்டில் ஐடி இளம்பெண்ணை மறித்து'... ‘சண்டையிட்ட நபர்’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Oct 07, 2019 07:56 PM

தனது ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணை வழிமறித்து, அந்நிய நபர் ஒருவர், இந்திய முறைப்படி உடை அணியுங்கள் என்று சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Wearing Pant Shirt Tells Woman To Wear Indian Dress

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில், சிம்ரன் கபூர் என்ற இளம் பெண், அவரது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில், கடந்த வியாழக்கிழமையன்று சென்றுகொண்டிருந்தார். அப்போது இரவு 9 மணியளவில், தனது அருகில் வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த அந்நிய நபர் ஒருவர், அவர்களை தடுத்து நிறுத்தி, ‘இந்தியாவின் விதிமுறைகளை பயன்படுத்துங்கள். தயது செய்து முறையான ஆடைகளை அணியுங்கள்’ என்று கூறினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், மற்றும் அவரது ஆண் நண்பர் அபினவ் முகர்ஜி, அந்த நபரை வழிமறித்து, கேள்வி கேட்கத் தொடங்கினர். ஏனெனில், அந்தப் பெண் ஷாட்ஸ்  மற்றும் டி-சர்ட்ஸ் அணிந்திருந்தார். இதனால் அந்த அந்நிய நபர் அவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது அந்த நபரின் வாக்குவாதத்தை, ஆண் நண்பர் தனது செல்ஃபோனில் வீடியோ எடுக்கத் துவங்கியுள்ளார். இதனைக் கண்டதும், குரலை தாழ்த்தி பேசிய அவர், ஐடி ஊழியரான சிம்ரனின் உடை குறித்து விவாதம் செய்தார்.

மேலும் ஆண் நண்பர், ‘எங்களுக்கும் அரசியலமைப்பு சட்டம் தெரியும். என்ன உடை அணிய வேண்டும் என்ற உரிமை எங்களுக்கு உள்ளது’ என்று பதிலடி கொடுத்தார். யாரென்றே தெரியாத அந்நிய நபர் ஒருவர் இவ்வாறு, நடுரோட்டில் நடந்துகொண்ட விதத்தை, ஆண் நண்பர் மற்றும் சிம்ரன் தங்களது ஃபேஸ்புக் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பதிவேற்றினர். இது தற்போது வைரலானயதைடுத்து, அந்த நபர் ஏன், அந்நிய உடையான பேண்ட் மற்றும் சர்ட்டுடன் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

 

Tags : #BANGALORE #IT #KARNATAKA