‘இனி ரொம்ப நேரம் காத்திருக்க தேவையில்ல’ ‘உலகிலேயே முதல்முறையாக’.. ஜியோவின் அடுத்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Selvakumar | Oct 15, 2019 12:06 PM
வாடிக்கையாளர் சேவை மையத்தை எளிதில் தொடர்பு கொள்வதற்காக ‘ஜியோ வீடியோ கால் அசிஸ்டெண்ட்’ என்ற புதிய வசதியை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் உலகின் முதலாவது அதிநவீன வீடியோகால் அசிஸ்டண்ட் தொழில் நுட்பத்தை ரிலையல்ன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artficial Intelligence) அடிப்படையிலான இந்த தொழில்நுட்பத்தை 4ஜி போன் அழைப்புகள் மூலம் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்துகொண்டு தானாகே பதிலளிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்ட ரேடிஸ் (Radisys) நிறுவனத்துடன் இணைந்து இதனை வடிவமைத்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.