‘ஸ்கூலுக்கு வரும் போது டீச்சர்ஸ் இத கட்டாயம் ஃபாலோ பண்ணனும்’.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 16, 2019 04:43 PM
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது சாதியை குறிக்கும் வகையில் கைகளில் கயிறு கட்டி வரக்கூடாது என சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கான புதிய உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கு இருசக்கரத்தில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் ஹெட்மெட் அணிந்து வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரகள் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடும் திரும்பும் மாணவர்களை சிறு குழுக்களாக பிரித்து 15 நிமிட இடைவெளியில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் 1 மணிநேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.