பெண்களை எப்படி ட்ரீட் பண்ணனும் என்பதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி: ராகுல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 13, 2019 03:49 PM
பெண்களுக்கு எல்லா இடங்களிலும் சம உரிமை உள்ளது என்றும் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்கிற விஷயத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்மாதிரியாக தெரிகிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்துக்கு வந்துள்ள ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கு சேஞ்ச் மேக்கர்ஸ் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடிய ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக மாணவிகளிடம் தன்னை சார் என்று அழைக்காமல், ராகுல் என்றே அழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த ராகுலின் அணுகுமுறைக்கு மாணவிகள் அரங்கை அதிரவைத்தனர். அதன் பின்னர் ராகுலை ராகுல் என்றழைத்த பெண்ணும் அரங்கை அதிரவைத்திருந்தார்.
அதன் பின்னர் ஊழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய ராகுல் காந்தி, நம் நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை பற்றாக்குறையாகவே தென்படுவதாகவும், கல்விக்கான நிதித் தொகை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.