‘நிர்வாண கோலத்தில் பெண்கள் ஸ்பீடு டிரைவிங்’... போலீஸை திணறடித்த ஃபுளோரிடா சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 14, 2019 02:15 PM

அமெரிக்காவின் மிக முக்கியமான இடமான ஃபுளோரிடாவில்தான் இத்தகைய மிரட்டுகிற சம்பவம் நடந்துள்ளது. இதில் 3 இளம் வயது பெண்கள் நிர்வாணமாக காரில் அமர்ந்திருந்தது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதன் பிறகு வண்டியை விரைவாகச் செலுத்தியுள்ளனர்.

3 Naked women arrested for speed driving after chasing by police

ஹைவேய்ஸில், விதிகளை மீறிய ஸ்பீடான டிரைவிங்கால் பல இடர்ப்பாடுகளை சாலை வாசிகளுக்கும், எதிர்வரும் வாகனங்களுக்கும் கொடுத்த இந்த பெண்களின் அதிவேக கார் டிரைவிங் அந்த நகரத்தையே உண்டு இல்லை என்று செய்துள்ளது. தவறான பாதைகளிலும், நோ எண்ட்ரி, ஒன் வே உள்ளிட்ட விதிகளை மீறிய ஆபத்தான வழிகளிலும் பயணித்த இந்த பெண்களை போலீஸார் விரட்டிச் சென்றுள்ளனர்.

சினிமா பாணியில் செக்போஸ்ட், ஹைவே பேட்ரோல் உள்ளிட்ட வாகன போக்குவரத்து காவல்துறையினரின் சிக்னல்களுக்கும் கட்டுப்படாமல் வேகமாக சென்ற இந்த பெண்களை விரட்டி பிடித்த போலீஸார் கிட்டத்தட்ட 33 கி.மீக்கு பிறகு இந்த பெண்களின் காரை மடக்கியபோது அவர்கள் மூவரும் நிர்வாணமாக இருந்துள்ளதால் கண்டிக்கப்பட்டனர்.

அதற்கு விளக்கம் கூறிய அந்த பெண்கள், குளித்து முடித்து ஏர்-டிரையிங்கிற்காக அவ்வாறு நிர்வாணமாக இருந்ததாக தெரிவித்தனர். அவர்களுள் கார் ஓட்டிய பெண்ணிற்கு வயது 18-ஆகவும், மற்ற இரு பெண்களுக்கு வயது 19 ஆகவும் இருந்துள்ளது. இதனால் இவர்கள் மீது போக்குவரத்துக்கு எதிரான விதிமீறல், தப்பியோட முயற்சி, அதிகாரிகளை நிந்தித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

Tags : #SPEED #DRIVING #BIZARRE #POLICE #WOMEN