செல்போனுக்கு 'ஸாரி கட்டி, குங்குமமும்' வச்சாச்சு...! 'அவங்க' 2 பேரும் மொபைலுக்கு உள்ள இருக்காங்க...! வைரலாகும் லேட்டஸ்ட் நிச்சயதார்த்தம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 12, 2020 02:49 PM

ஆன்லைனில் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இளம்ஜோடிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Online engagement video is going viral on social networks

தகவல்தொழில்நுட்பத்தின் பயன்பாடு எதிர்காலத்தில் அதிவேகத்தில் இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தனர். ஆனால், அந்த பயன்பாடு 'அதுக்கும் மேல' என்கிற விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதான நிச்சயதார்த்த விழாவிற்காக பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இருவராலும் இந்தியாவிற்கு வர முடியாத சூழல் உருவானது. எனவே பையனுக்கும் பெண்ணுக்கும் ஆன்லைனிலேயே நிச்சயதார்த்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒரு மொபைலில் வீடியோ காலில் பெண் இருக்க, மற்றொரு போனில் வீடியோ காலில் இளைஞர் இருக்க இருவருக்கும் முறைப்படி சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றது. அங்கிருந்த உறவினர்கள் பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு பதிலாக, செல்போனுக்கு வைத்தனர். பெண்ணுக்கு தலையில் பட்டு துணியை போடுவதற்கு பதிலாக, செல்போனுக்கு அதை அணிவித்தனர். இந்த சுவாரஸ்யமான நியூ டெக்நாலஜி நிச்சயதார்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : #ENGAGEMENT