“நல்ல வேல பண்ணிருக்க ராசா!”... பெண்ணின் “பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிவைத்த நாய்க்கு” .. குவிந்து வரும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 30, 2020 12:56 PM

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. காரணம் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் தான்.

Dog getting appreciations for destroying owners passport

அதன்படி அப்பெண் குறிப்பிட்டுள்ள அந்த பதிவில், வருடைய நாய் அண்மையில் அவருடைய பாஸ்போர்ட்டை கடித்துக் குதறி போட்டுவிட்டதாம்.  சாதாரணமான, ஆவணங்கள் இப்படி ஆனாலே, அவற்றை வாங்குவது மிகக் கடினம் என்கிற நிலையில், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல உதவக்கூடிய பாஸ்போர்ட்டை இந்த நாய் மிகவும் அசாதாரணமாக கடித்துக் குதறியுள்ள சம்பவம் யாருக்குத்தான் கோபத்தை வரவழைக்காது?

ஆனால் அந்தப் பெண் உட்பட்ட அந்த பதிவை படித்த யாருக்கும் அந்த நாயின் மீது கோபம் வரவே இல்லை. அதை விடவும் அந்த பாஸ்வேர்டை கடித்துக் குதறியதற்கு அந்த நாயை பலரும் பாராட்டித்தான் வருகின்றனர். ஆம், பாஸ்போர்ட்டை கடித்த இந்த நாய்க்கு இவ்வளவு பாராட்டு கிடைத்ததற்கு ஒரு மிகப்பெரும் காரணம் இருக்கிறது.

அந்தப் பெண்மணி தனது பாஸ்போர்ட்டை வைத்து சீனாவின் வுஹான் நகரத்துக்கு பயணம் செல்வதற்காக திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நேரத்தில்தான் இந்த நாய் அப்பெண்ணின் பாஸ்போர்ட்டை கடித்து குதறி உள்ளது. இதனால் அந்தப் பெண்ணால் சீனாவுக்கு செல்ல முடியவில்லை. இதனால் நிச்சயம் அந்தப் பெண் வருத்தப்படவில்லை. காரணம் நமக்கே தெரியும். சீனாவில், குறிப்பாக அந்தப் பெண் செல்வதற்காக திட்டமிட்டிருந்த வுஹான் நகரில்தான் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி பலரின் உயிரையும் குடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தெரிந்தோ தெரியாமலோ பாஸ்போர்ட்டை கடித்து குதறி தன்னுடைய எஜமானரைக் காப்பாற்றிய அந்த நாயை பாராட்டாமல் என்ன செய்ய? பலரும் இணையத்தில் அந்த நாயை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Tags : #DOG #CORONAVIRUS #PASSPORT