மொத்தமா நீ 'அடிச்ச' ரன்ன... இப்டி ஒரே 'ஓவர்ல' குடுத்துட்டியே ராசா...பேசாம 'பவுலிங்' ஸ்டார்ட் பண்ணிடு 'தல'... விளாசும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 02, 2020 11:16 PM

இன்று நடைபெற்ற 5-வது டி20 போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 156 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

IND Vs NZ: Shivam Dube\'s unwanted T20 Record, Twitter Reacts

இதன் வழியாக 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அந்நிய மண்ணில் புதிய சாதனை படைத்துள்ளது. இன்றைய போட்டியில் பும்ரா 4 ஓவர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆனால் ஆல்ரவுண்டர் சிவம் துபே ஒரே ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான உலக சாதனையை படைத்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் பெங்களூர் அணிக்கு நல்லவொரு பவுலர் கிடைத்து விட்டதாக சிவம் துபேவுடன் சேர்த்து விராட் கோலியையும் கலாய்த்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி சிவம் துபேவின் பந்துவீச்சை பார்த்த பின்னர் கே.எல்.ராகுல் பந்துவீசி பயிற்சி பெற ஆரம்பித்து விட்டார் என, ராகுல் பந்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.