'கார்'லாம் வேணாம்..'டயர்' மட்டும் போதும்..இது என்ன புது 'திருட்டா' இருக்கு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 01, 2019 04:02 PM
சென்னை ஜெ.ஜெ.நகர் டிவிஎஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஷ்பாபு.இவர் இரண்டு வாரங்களுக்கு முன் புதிய மாருதி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.தனது வீட்டுக்கு முன்பு கார் நிறுத்த இடமில்லாததால் இரண்டு தெருக்கள் தள்ளி தன்னுடைய உறவினர் வீட்டில் காரை நிறுத்தி வைத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதேபோல காரை உறவினர் வீட்டுமுன் நிறுத்தி வைத்துவிட்டு, நேற்று காலை காரை எடுக்க சென்றிருக்கிறார்.காரைப்பார்த்த மகேஷ் அதிர்ந்து போனார்.ஏனெனில் கார் நிறுத்தி இருந்த இடத்தில் அவரது காரின் நான்கு டயர்களையும் கழற்றி விட்டு,அங்கு திருடர்கள் கற்களை வைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸ் ஸ்டேஷனில் மகேஷ் புகார் செய்ய,கண்டிப்பாக தனி ஆளாக இதனை செய்திருக்க முடியாது என்பதால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
Tags : #POLICE #CHENNAI
