"என்னா ஒரு வில்லத்தனமான 'உறுதிமொழி'..." "தமிழ் சினிமா 'வில்லன்களுக்கே' 'டஃப்' கொடுத்த கல்லூரி முதல்வர்..." "ஸ்டிரிக்ட் 'ஆபிஸரா' இருந்திருப்பாரு போல..."

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 29, 2020 09:55 PM

காதலித்து திருமணம் செய்யமாட்டோம் என்று மாணவிகளை உறுதிமொழி ஏற்கவைத்த கல்லூரி முதல்வருக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

College principal making students pledge against love marriage

மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் உள்ள அமராவதி பெண்கள் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் என்பதால்  மாணவிகளை நல்வழிப்படுத்துவதாக நினைத்து காதலித்து திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி சார்பில் நடைபெற்ற என்.எஸ்.எஸ் முகாமில் பங்கேற்ற மாணவிகளை, "யாரையும் காதலிக்க மாட்டோம், காதலித்து திருமணமும் செய்ய மாட்டோம்" என்று உறுதிமொழி ஏற்க வைத்துள்ளனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. கல்லூரி முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மாணவிகளை கட்டாயப்படுத்தி உறுதிமொழி எடுக்க வைத்த கல்லூரி முதல்வர் மற்றும் அவருடன் இருந்த பேராசிரியர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கல்லூரி முதல்வர் ராஜேந்திர ஹவரே, போரசிரியர் பிரதீப் டான்டே, என்.எஸ்.எஸ். செயல் அதிகாரி வி.டி.கப்ஷே ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : #MAHARASHTRA #NAGPUR #COLLEGE STUDENTS #PLEDGE #LOVE MARRIAGE #PRINCIPAL #SUSPENDED