'கொஞ்சம் அங்கே பாரு கண்ணா'.. 'எண்ணி 7 நிமிஷத்துல'.. கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுவனை மீட்ட போலீஸார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 21, 2019 11:00 AM

டெல்லி மோகன் கார்டன் பகுதியில் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவனை எண்ணி 7 நிமிடங்களில் போலீஸார் மீட்டுள்ள சம்பவம், அவர்களுக்கு பெரும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

police rescued minor boy from kidnappers in 7 mins

சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் ரிஜ்வால் மற்றும் அவரது சகோதரர்கள் இருவரும் மோகன் கார்டன் பகுதிக்கு காரில் சென்றபோது, ரிஜ்வாலை மட்டும் சில கடத்தல் காரர்கள் காருடன் சேர்த்து கடத்தியுள்ளனர். உடனே பதறிய ரிஜ்வாலின் சகோதரர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

அப்போது தனது காரில் இருந்த அடையாளமாய் ஹை லேண்டர் என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தைக் கூறினார். அது ஒன்றுபோதுமே? இவ்வளவு டீடெய்ல்ஸ் இருக்கே என்று நினைத்துக்கொண்ட போலீஸார் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து இந்த வாசகம் எழுதப்பட்ட காரைத் தேடச் சொல்லியிருக்கின்றனர்.

அந்த கார் உத்தம் நகர் சிக்னலில் இருப்பதாகத் தகவல் வர, அங்கு விரைந்த போலீஸார் சிறுவன் ரிஜ்வாலையும், காரையும், சிறுவனிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தையும் மீட்டதோடு கடத்தல்காரர்களில் ஒருவரான ரவியையும் பிடித்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

Tags : #KIDNAP #POLICE