அடுத்த 24 மணிநேரத்தில்... லேசான மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 17, 2019 05:07 PM

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

light to moderate rain alert in tamilnadu and puducherry

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நகரில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 3 சென்டி மீட்டரும், நாகை மாவட்டம் ஆனைக்காரன்சத்திரம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டரும், செங்குன்றம், பூண்டி, மணமேல்குடி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : #RAIN #ALERT #CHENNAI #IMD