‘4 பேர் என்கவுண்டர் சம்பவம்’! ‘சல்யூட் அடித்த பெண்’.. தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 06, 2019 11:59 AM

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆணையர் வி.சி சஜ்னாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

People celebrate and cheer for police at the encounter site

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டோல்கேட் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே போலீசார் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக சம்பவம் நடந்த இடத்துக்கு நான்கு பேரும் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நான்கு பேரும் தப்பி செல்ல முயன்றதாகவும், அதனால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட தகவலை உறுதிப்படுத்திய போலீஸ் கமிஷ்னர் வி.சி.சஜ்னாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வாராங்கல் பகுதியில் பொறியியல் மாணவிகள் இருவர் மீது ஆசிட் வீசிய 3 பேர் கொண்ட கும்பலை என்கவுண்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #POLICE #TELANGANA #TELANGANAPOLICE #JUSTICEFORPRIYANAKAREDDY #HYDERABADPOLICE #ENCOUNTER