அந்த ‘டீ’ய குடிச்ச உடனே மயக்கமா வந்துச்சு, அதுக்கப்புறம்...! ‘ஹவுஸ் ஓனர் மனைவியை பாலியல் பலாத்காரம்...’ - விசாரணையில் வெளிவந்த எதிர்பாராத ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநொய்டாவில் வாடகைக்கு குடியிருந்தவர் தன்னை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பின் பல புதிய திருப்பங்கள் வெளியாகியுள்ளன.

நொய்டாவில் உள்ள யூதரின் ஜஹாங்கிர்பூர் பகுதியில் இருக்கும் குடியிருப்பில் விஷால் என்னும் 23 வயது இளைஞர் குடியிருந்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டுமானத் தொழிலாளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வீட்டு உரிமையாளரின் மனைவி, தன் வீட்டில் குடியிருக்கும் விஷால் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில், குற்றம் சாட்டப்பட்ட விஷால் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் விஷால் என்பவர் வாடகை அளிக்கும் சாக்கில் அடிக்கடி தன் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தனது கணவர் வேலைக்காக ராஜஸ்தான் சென்று இருந்த சமயம் ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டார்.
சம்பவம் நடந்த நாளன்று, வாடகை தருவதாக வீட்டிற்கு வந்து, தேநீர் போட்டு தந்து வலுக்கட்டாயமாக பருக வைத்துள்ளார். அப்போது, எனக்கு மயக்கம் வர ஆரம்பித்தது, அதன்பிறகு அவர் என் ஆடைகளை அகற்றத் தொடங்கி, என் மீது கட்டாயப்படுத்த முயன்றார். நான் எதிர்த்தபோது அவர் என்னைத் தாக்கி என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்வதாக மிரட்டினார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
அதையடுத்து ஜேவார் காவல்நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
விசாரணையில், அந்தப் பெண் விஷாலுடன் உறவு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர் . கணவருக்கு இந்த விஷயம் தெரிய வரவே தான், தன் மனைவியை விட்டு பிரிந்ததாக தெரிய வந்துள்ளது என துணை ஆய்வாளர் ஃபெரோஸ் கான் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
