'தள்ளாடும் வயசு, மயக்கும் பேச்சு'... '300 குழந்தைகள்'... 'உலகமே பார்த்து ஆடி போன சைக்கோ'... எதிர்பாராமல் நடந்த முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 14, 2020 05:10 PM

ஆங்கில படங்களை மிஞ்சும் வகையில், கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூரத்தைச் செய்த முதியவரின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Frenchman Held For Alleged Child Molesting Kills Himself

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் 65 வயது மதிக்கத்தக்க பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ  என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரது அறையைச் சோதனை செய்ததில், அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுமிகளை மீட்டனர். இதையடுத்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், இந்தோனேசியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்த அதிரவைக்கும் தகவல் தெரியவந்தது.

பிராங்கோயிஸ் லேப்டாப்பில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வீடியோ இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நபர் குறித்துத் தெரிவித்த ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் நானா சுட்ஜானா, ''இந்த நபர் குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசையாகப் பேசி பழகுவார்.

பின்னர் அவருடன் நெருக்கமாக இருக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு 250,000 முதல் ஒரு மில்லியன் ரூபியா வரை கொடுப்பார் அப்படி நெருக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளாதவர்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளார். இதற்கிடையே பல ஆண்டுகளாக பிராங்கோயிஸ் இந்தோனேசியக் குழந்தைகளைத் துன்புறுத்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளார்கள்.

இதனிடையே கைது செய்யப்பட்ட பிராங்கோயிஸ், இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கு ஆளானதால், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் சிறையிலிருந்த பிராங்கோயிஸ், தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் படி அவர் கழுத்தில் கேபிள் ஒன்றை அழுத்திப் பிடித்து, மூச்சுத் திணறி உயிரிழக்கும் வகையில் முயன்றுள்ளார்.

இதையடுத்து, அதிகாரிகள் அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சையாக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Frenchman Held For Alleged Child Molesting Kills Himself | World News.