'சென்னையில் பயங்கரம்...': வீட்டு ஓனரை 'ஓட ஓட விரட்டி' குத்தி கொலை...!' - வாடகை கேட்டதால் ஆத்திரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் ஒருவர் ஓடஓட விரட்டி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குன்றத்தூரில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக 4 மாதமாக வாடகை பணம் அஜித் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, 4 மாத வாடகை பாக்கியை கேட்டதால் அஜித் என்பவருக்கும் வீட்டு உரிமையாளர் குணசேகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த வாடகைதாரர் அஜித், வீட்டு உரிமையாளரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாடகைதாரர் அஜிதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட செய்தி சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வீட்டு உரிமையாளர் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
