“இது BCCI-யின் தோல்வி.. தோனி ரசிகர்களும் இதையேதான் நெனைச்சிருப்பாங்க!”... பொறிந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 23, 2020 03:13 PM

இந்த மாதம் ஆகஸ்டு 15-ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று தோனி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். எனினும் தோனி இப்படி முறையாக பிரியாவிடை அளிக்காமல் ஓய்வு பெறுவதற்கு அவரை விட்டிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

MSDhoni retirement BCCI didnt treat in right way, says saqlain mushtaq

இது தொடர்பாக பேசிய அவர், “எப்போதும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செய்திகளைத்தான் தெரிவிப்பவன் நான், அதைவிடுத்து எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்க மாட்டேன். அதே சமயம், தோனியின் ஓய்வு விஷயத்தில் நான் இதை சொல்லியே ஆக வேண்டும்.  ஏனென்றால் இது பிசிசிஐ தவறவிட்ட இடம். இது பிசிசிஐயின் தோல்வி. தோனி போன்றதொரு பெரிய வீரர் ஒருவரை பிசிசிஐ முறையான விதத்தில் நடத்தவில்லை. அவரது ஓய்வு இப்படி நடந்திருக்கக் கூடாது என்பதே என் இதயத்திலிருந்து தோன்றும் உணர்வு. எனது இதே உணர்வுதான், தோனியின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தோன்றியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், பிசிசிஐ குறித்து, தான் இவ்வாறு கூறுவதற்கு மன்னிப்பு கோருவதற்காகவும், பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை என்பது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் பேசியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது மகிழ்ச்சிதான் என்றாலும், அதே சமயம் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் பெறும் ஓய்வு இன்னும் வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஒவ்வொரு வீரருக்கும் கனவுகள் இருக்கும். வீரர்கள் தாங்கள், ஆட்டத்தில் உயர்ந்திருக்கும் போதுதான் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படியான கனவு தோனிக்கும் இருந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MSDhoni retirement BCCI didnt treat in right way, says saqlain mushtaq | Tamil Nadu News.