"கொரோனா மருந்து'னு எதையோ குடுத்தாரு... மெதுவா 'எங்க டிரஸ்ஸ' எல்லாம் கழட்டி... 'ஆபாச படம்' பார்க்க வச்சு... அப்புறம்..." - கண்ணீர்விட்டு 'கதறிய' சிறுவர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் முசாஃபர்நகரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் முசாஃபர்நகரில் இயங்கும் கோடியா மடம் என்னும் அஸ்திரமத்தை நடத்தி வருகிறார் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ். அவருடைய மடத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், பல கொடுமைகளை அனுபவிப்பதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடந்த செவ்வாயக்கிழமை அன்று போனில் குழந்தைகள் நல வாரிய ஹெல்ப்லைனுக்கு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், புகாரின் பெயரில் கோடியா மத் ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களை ஆசிரமத்திலிருந்து மீட்டனர். அப்போது மீட்கப்பட்ட சிறுவர்களை பரிசோதனை செய்த போது, அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.
அதைத் தொடர்ந்து, போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சாமியார், சிறுவர்களுக்கு கொரோனா மருந்து என்ற பெயரில் வலுகட்டாயமாக மதுபானத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு, அவர்கள் போதையில் இருக்கும் போது, ஆபாச படங்களை வற்புறுத்தி காண்பித்துள்ளார். பின்னர், தன்னுடைய ஆடைகளைக் களைந்து, சிறுவர்களுடன் தகாத முறையில் உடலுறவு கொண்டு, அவர்களை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடுமைபடுத்தியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கூறுகையில், அவர் பேச்சைக் கேட்க மறுத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். அவர் மீது தற்போது போக்சோ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
