'நைட்டு' முழுக்க எங்களோட சேர்ந்து 'புள்ளையை' தேடினான்... சிறுமியின் தந்தை கதறல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.
![Pudukkottai: Victim\'s Father Seeks justice for her Daughter Pudukkottai: Victim\'s Father Seeks justice for her Daughter](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/pudukkottai-victims-father-seeks-justice-for-her-daughter.jpg)
இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு தூக்குத்தண்டனை அளிக்க வேண்டும் என தமிழக முழுவதும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிறுமியின் தந்தை, கொலை குற்றவாளி ராஜா இரவு முழுவதும் தங்களுடனேயே சேர்ந்து தேடியதாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர், '' கடந்த செவ்வாய்க்கிழமை என்னுடைய மூத்த மகளை என்னுடைய பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவன் ஊருக்கு பின்புறமாக உள்ள காளி கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளான். கோயிலில் தன்னுடைய பூ போடும் வேலையை முடித்து விட்டு வரும்போது கருவேல மரங்கள் நிறைந்து கிடக்கும் இடத்தில் வைத்து என்னுடைய மகளை சித்திரவதை செய்து அடித்து கொலை செய்துள்ளான்.
என் மகளை காணவில்லை என இரவு முழுவதும் நாங்கள் தேடியபோது அவனும் எங்களுடன் சேர்ந்து தேடுவது போல நடித்தான். மறுநாள் அவன் தான் குற்றவாளி என போலீசார் கைது செய்தனர். என் மகளுக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது. என் மகளைக் கொடுரமா கொலை செய்த ராஜா என்ற நாயைத் தூக்கில் தொங்கவிடணும் அப்போதுதான் இப்படி ஒரு சம்பம் நடைபெறாது,'' என்றார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)