அரள விட்ட அண்டர்வேர்ல்டு டான் தாவூத் இப்ராஹிம்!.. ‘இப்ப இங்கதான் வாழ்ந்துட்டு இருக்கார்!’.. இத்தன வருஷம் கழிச்சு .. அட்ரஸோட காட்டிக்கொடுத்த பாகிஸ்தான்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவால் சுமார் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1993ம் ஆண்டு 257 பேர் பலியான மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் தஞ்சம் புகவில்லை என்று பாகிஸ்தான் நீண்ட காலமாக மறுத்து வந்த நிலையில், சர்வதேச நெருக்கடிகள் தந்த அழுத்தம் கரணமாக முதல் முறையாக தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிப்பதை தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.
முன்னதாக “பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், பொருளாதார தடை விதிக்கும் வகையில் கருப்பு பட்டியலில் அந்நாட்டை சேர்ப்போம்” என்று பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டால் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிதி அமைப்புகளில் இருந்து பெறப்படும் நிதி கிடைக்காமல் போகும் நிலை பாகிஸ்தானுக்கு உருவாகலாம் என்பதால், நிதி நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் 88 இயக்கங்களுக்கு பாகிஸ்தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.குறிப்பாக மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோருக்கும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவால் சுமார் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உயிருடன் இருப்பதாகவும், அவர் கராச்சியில் கிளிஃப்டன் பகுதியில் உள்ள சௌதி மசூதிக்கு அருகே இருக்கும் ஒயிட் ஹவுஸ் என்கிற வீட்டில் வசித்து வருவதாகவும் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.