தமிழகத்தில் மீண்டும் ஒரு 'அதிர்ச்சி' சம்பவம்! - 17 வயது ’சிறுமி’ தற்கொலை... ஆசை காட்டி மோசம் செய்தவனால் எடுத்த விபரீத முடிவு! - திருச்சி மணப்பாறையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த 22 வயதான ராம்கி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பெற்றோருக்கு தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, உறவினரான ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைத்துவிடலாம் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ராம்கி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சிறுமியின் பெற்றோர் பேசியுள்ளனர். திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பெண்ணை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ராம்கியின் பெற்றோர், சிறுமியின் பெற்றோரை தரக்குறைவாக பேசி அனுப்பியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராம்கி என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
