'அங்கிள் நான் உங்க பொண்ணு மாதிரி'... 'இரக்கமில்லாமல் சீரழித்த வட்டிக்கடைக்காரர்'... '34 வருஷம் இதுதான் கதி'... அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வட்டி பணம் கொடுக்க வந்த 19 வயது இளம் பெண்ணை ஈவு இரக்கமில்லாமல் சீரழித்த, வட்டிக்கடைக்காரருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்மணி ஒருவர் குடும்ப கஷ்டம் காரணமாக பள்ளிபாளையம் அக்ரஹரம் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரிடம் கடந்த 2009-ம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார். அதற்கான வட்டி தொகையை மாதம் தோறும் தவறாமல் செலுத்தி வந்துள்ளார். அதன்படி கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வட்டி தொகையைச் செலுத்த தன்னால் போக முடியாத நிலையில், அந்த பெண்ணின் 19 வயது மகளிடம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். நிதி நிறுவனத்திற்குச் சென்ற அந்த பெண்ணை நிதி நிறுவன அதிபர் சிவகுமாரும், அவரது நண்பர் ரவி என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த இளம் பெண் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். மேலும் அந்த பெண்ணை நிர்வாணமாகப் படம் எடுத்து மிரட்டியுள்ளார்கள். சில நாட்கள் கழித்து அந்த வீடியோவை இணையத்திலும் பதிவேற்றியுள்ளார்கள். நடந்த சம்பவங்களைத் தனது தாயிடம் சென்று கதறிய அந்த பெண், தன்னை நாசமாகிய அந்த கயவர்களுக்குத் தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதையடுத்து இந்த வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு மாற்றப்பட்டு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது வழக்கில் 2-ம் குற்றவாளியான ரவி உயிரிழந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நிதி நிறுவன அதிபருக்கு சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 13 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கிட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட தனக்கு தற்போது நீதி கிடைத்துள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
