'அப்பா, அம்மா வேலைக்கு போனதை நோட்டம் போட்ட ஆட்டோ டிரைவர்'... 'தனியாக இருந்த பிளஸ் ஒன் மாணவி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த ஆவடி கொள்ளுமேடு பகுதியில் தம்பதியர் ஒருவர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர் ஆவடியில் உள்ள தனியார்ப் பள்ளியில் +1 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டார்கள். இதனை நன்கு நோட்டம் போட்ட கொள்ளுமேடு, செங்குன்றம் சாலையில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சீனிவாசன் என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

சிறுமி என்ன நடக்கிறது சுதாரிப்பதற்குள் சீனிவாசன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். தனக்கு நடந்த கொடுமை குறித்துப் பெற்றோரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார். இதையடுத்து பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சீனிவாசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சீனிவாசன் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை மிரட்டி ஆட்டோ டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
