'அப்பான்னு தானே நம்பி மாத்திரையை சாப்பிட்டேன்'... 'தகப்பன் செய்த கொடூர சம்பவம்'... கையை விரித்த சித்தி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாய்ச்சலுக்கு மாத்திரை தருவதாகக் கூறி, பெற்ற தகப்பன் செய்த கொடூர செயல், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் ஹரலூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால், பயந்து போன அந்த இளம்பெண், தனது தந்தையிடம் ஏதாவது மருந்து தருமாறு கேட்டுள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தை, இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகிவிடும் என சில மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட அந்த பெண் சிறிது நேரத்தில் மயக்கமான சூழ்நிலைக்குச் சென்று அசந்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் மயக்கநிலையிலிருந்து திரும்பிய அந்த இளம்பெண்ணின் ஆடைகள் கலைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் உடலில் கடுமையான வலியும் இருந்துள்ளது. அப்போது தான், தனது தந்தை தூக்க மாத்திரை கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து கதறி அழுத அந்த இளம் பெண், தனது சித்தியிடம் (தந்தையின் இரண்டாம் மனைவி) சென்று தனக்கு நடந்த கொடூரத்தைக் கூறி உதவி கேட்டுள்ளார். காவல்நிலையத்தில் சென்று முறையிடலாம் எனக் கூறியுள்ளார்.
ஆனால் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், என்னால் உதவ முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், பாத்ரூம் கெமிக்கலை குடித்துவிட்டு காவல்நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவங்களை முறையிட்டுள்ளார். புகாரை உடனடியாக எடுத்துக்கொண்ட காவல்துறையினர், இளம் பெண் தற்கொலைக்கு முயன்றதை அறிந்து, அதிர்ந்து போய் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
மேலும் அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த கொடூர சம்பவத்திற்கு அவரது இரண்டாவது மனைவியும் உடந்தையாக இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெற்ற மகளையே, தூக்க மாத்திரை கொடுத்து தந்தை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
