'வாட்ஸ் அப்' திறக்கவே முடியல!.. அவ்ளோ ஆபாச வீடியோக்கள்!'.. 'இந்த முறை BLOCK பண்ணல... ஆசையா ஒரு REPLY வந்துச்சு'!.. சென்னைப் பெண் தரமான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Aug 14, 2020 05:56 PM

ஆபாசமான வீடியோக்களை அனுப்பிய நபரை, சென்னைப் பெண் ஒருவர் நூதன முறையில் போலீசிடம் சிக்க வைத்துள்ளார்.

chennai arumbakkam woman honeytraps man who sent porn videos whats app

சென்னை அரும்பாக்கம் அருகே, திருமணமான பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்டுள்ள சில மனச்சங்கடங்களால், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது, அந்த நபர் தகாத முறையில் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, பல்வேறு எண்களில் இருந்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார்.

பின்னர், 4 நாட்கள் கழித்து திடீரென்று அந்தப் பெண்ணின் வாட்ஸ் அப்புக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண், இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய பெற்றோரிடம் விவாதித்துள்ளார்.

அப்போது தான் ஒரு அதிரடி திட்டத்தை குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, அந்த நபரிடம் தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறும், அவருடன் பேச விரும்புவதாகவும் இந்த பெண் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதை நம்பி அவரும் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த குடும்பத்தினர் அவரைத் தாக்கி மடக்கிப்பிடித்தனர். பின்னர், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் திருத்தணியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பது தெரியவந்தது.

மேலும், புதிய செல்பேசி எண்களை எதர்ச்சியாக அழைத்து பேசுவதும், அவர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அவரை பாலியல் தொந்தரவு செய்வதும் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai arumbakkam woman honeytraps man who sent porn videos whats app | Tamil Nadu News.