‘யாருமே முன்வரல’!.. கல்யாணம் முடிஞ்ச கையோடு செஞ்ச ‘முதல்’ காரியம்.. புதுமண ஜோடிக்கு குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்யாணம் முடிஞ்ச கையோடு புதுமண ஜோடி செய்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது குழந்தைக்கு செலுத்த ரத்தம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் குழந்தையின் ரத்த வகையில் உள்ளவர்கள், ரத்த தானம் செய்ய முன்வரவில்லை.
இந்த தகவலை அறிந்த புதுமண ஜோடி ஒன்று, கல்யாணம் முடிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்துள்ளனர். இதனால் குழந்தைக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உத்தரப்பிரதேச காவலர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
मेरा भारत महान |
एक बच्ची को ब्लड की जरूरत थी,कोई भी रक्तदान करने को सामने नही आ रहा था, क्योंकि वो किसी दूसरे की बच्ची थी,अपनी होती तो शायद कर भी देते,
खैर, शादी के दिन ही इस जोड़े ने रक्तदान कर बच्ची की जान बचायी |
Jai Hind,#PoliceMitra #UpPoliceMitra #BloodDonation pic.twitter.com/tXctaRe1nR
— Ashish Kr Mishra (@IndianCopAshish) February 22, 2021
இந்த நிலையில் தக்க சமயத்தில் ரத்த தானம் செய்து சிறுமியின் உயிரை காப்பாற்றிய புதுமண ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.