‘திருடப் போன இடத்தில் பெண்ணை ஆபாச வீடியோ!’.. கைதான இடத்தில் நீதிபதிக்கே ‘சவால்!’ - 'யாருயா இவரு?'.. 'ஒரே நாளில் வைரலான ‘ரவுடி!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் நீதிபதியை தரக்குறைவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த கீரைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் கொள்ளை அடித்த நபர் ஒருவர் அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவரை கத்தி முனையில் செல்போனில் வீடியோ எடுத்தபடி ஆபாசமாக நடக்க முயற்சித்தார்.
அக்கம் பக்கத்தினர் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்தபோது அந்த நபரான டேவிட் தப்பி ஓடினார். பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் முன் டேவிட் நீதிபதி அவர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், “நீங்க என்ன கேஸ் பாக்குறீங்க? ஏழைன்னா ஒரு நியாயம்.. பணக்காரன்னா ஒரு நியாயமா? நான் செஞ்சது தப்பு.. நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க.. அனுப்பிவிடுங்கனு ஜட்ஜ்கிட்ட சொல்லுவேன்” என பேசியதுடன் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
