'இந்த உலகத்த விட்டு... அவன் போயிட்டான்!'.. 'ஆனா... எங்க மனசுல'.. இதயத்தை ரணமாக்கும் சோகம்!.. நாய்க்கு சிலை அமைத்து... நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக மக்கள் தலைவர்களுக்கும், மாபெரும் ஆளுமைகளுக்கும் தான் சிலை வைப்பார்கள். ஆனால், நாய் ஒன்றுக்கு சிலை அமைத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலை நிறுவும் அளவுக்கு அந்த நாய் அப்படி என்ன செய்தது?

காவல்துறையில் மோப்ப நாய்களின் பங்கு அளப்பரியது. பல மர்மமான வழக்குகளை மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வெடிகுண்டு, கொலை போன்ற பல வழக்குகளை மோப்ப நாய்கள் முடிக்க உதவியுள்ளன. அப்படி உற்ற நண்பனாக இருந்த ஒரு மோப்ப நாய்க்கு சிலை அமைத்து மரியாதை கொடுத்துள்ளனர் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் போலீசார்.
முசாபர்நகர் போலீசார் கட்டுப்பாட்டில் இருந்த டிங்கி என்ற மோப்பநாய் கிட்டத்தட்ட 49 குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க உதவியுள்ளது. இந்த நாய் கடந்த வருடம் இறந்தது.
இந்நிலையில், ஜெர்மன் செப்பேர்ட் வகை நாயான டிங்கியின் சிலையை உருவாக்கி அதற்கு மரியாதை செலுத்தியுள்ளார், அதனை பராமரித்து வந்த சுனில்குமார். இந்த தகவல்களையும், புகைப்படத்தையும் ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் பகிர்ந்துள்ளார். சுனில்குமாரின் அன்புக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
