குடும்பத்துடன் கேரளாவுக்கு ‘டூர்’.. கவர்ச்சி நடிகை ‘சன்னி லியோன்’ மீது பரபரப்பு புகார்.. போலீசார் தீவிர விசாரணை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் கவிர்ச்சி நடிகை சன்னி லியோன் தன்னிடம் 29 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாக்களில் நடித்து வருகிறார். ஊரடங்கு சமயத்தில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்த சன்னி லியோன், தற்போது குடும்பத்துடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக சன்னி லியோன் 29 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெரும்பாவூரைச் சேர்ந்த ஆர்.ஷியார் என்பவர் கேரள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ள சன்னி லியோனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கொரோனா பரவல் காரணமாக அவர்கள் குறிப்பிட்ட தேதியை தாண்டி 5 முறை நிகழ்ச்சியை மாற்றி அமைத்தால் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என சன்னி லியோன் போலீசாரிடம் கூறியுள்ளார்.
From Kerala with Love 💞 pic.twitter.com/gfBtsR7CeE
— sunnyleone (@SunnyLeone) January 30, 2021
மேலும் இத்தனை முறை நிகழ்ச்சி மாற்றப்பட்டதால், தன்னுடைய கால்ஷீட் தேதிகள் வீணானதாக புகார் அளித்தவர் மீது சன்னி லியோன் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் தள்ளி வைக்கப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்பட்டால் தான் கலந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினரிடம் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
