‘கடவுள் என் கனவுல வந்து சொன்னார்’!.. சத்தமில்லாமல் பெண் செய்த விபரீத காரியம்.. மிரண்டுபோன அக்கம்பக்கத்தினர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 11, 2021 12:39 PM

கடவுள் கனவில் சொன்னதாக கூறி பெண் ஒருவர் உயிருடன் ஜீவசாமதி அடைய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP woman gets herself buried in pit to appease god, saved by police

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கட்டம்பூர் அடுத்த சஜேதி பகுதியை சேர்ந்தவர் ராம் சஜீவன். இவரது மனைவி கோமதி தேவி. 50 வயதான இவர் தனது குடும்பத்தினரிடம், மகா சிவராத்திரி அன்று கடவுள் தனது கனவில் வந்ததாகவும், அதனால் தான் ஜீவசமாதி அடைய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியாத வகையில் அவரது வீட்டின் முன்பு உறவினர்கள் ஒரு குழி தோண்டியுள்ளனர். இதனை அடுத்து குழிக்கு முன் பூஜைகள் செய்து வழிபட்டுள்ளனர். பின்னர் கோமதி தேவி குழிக்குள் அமர்ந்த நிலையில் தியானம் செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது அவரை துணியால் போர்த்திவிட்டு குழியை மண்ணைப் போட்டு அவரது உறவினர்கள் மூடியுள்ளனர்.

UP woman gets herself buried in pit to appease god, saved by police

இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், குழிக்கு உயிருடன் புதைக்கப்பட்ட கோமதி தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைப்பின் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்த போலீசார், அப்பெண்ணை மனநல சிகிச்சைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மூட நம்பிக்கையால் பெண் ஒருவர் உயிருடன் ஜீவசமாதி அடைய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UP woman gets herself buried in pit to appease god, saved by police | India News.