கூலித் தொழிலாளியின் பேங்க் அக்கவுண்டில் இருந்த ரூ.1 கோடி.. ‘ஆனா இது அவருக்கே தெரியாது’!.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகூலி தொழிலாளி ஒருவரது வங்கிக் கணக்கில் 1 கோடி ரூபாய் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஊழலுடன் தொடர்புடைய பல தனிநபர் கணக்குகளின் சுயவிவரங்களை ஆய்வு செய்வதற்காக தெலுங்கானா போலீசார் டெல்லி சென்று சிலரது வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது டெல்லியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், வங்கி தொடர்பான பாஸ் புத்தகம், ஏடிஎம் உள்ளிட்ட எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட கூலி தொழிலாளரின் வங்கிக் கணக்கை ஆன்லைனில் லோன் ஆப் நடத்தி வரும் சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவரது வங்கிக் கணக்கை ஆன்லைன் லோன் ஆப் மோசடி அல்லது ஆன்லைன் சூதாட்ட மோசடிக்காக பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், ‘தினக்கூலி தொழிலாளரின் விவரங்களைப் பயன்படுத்தி, ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதித்ததிற்காக மாதந்தோறும் ரூ.4,000 அவர் பெற்று வந்துள்ளார். ஆனால் தனது வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி இருப்பதும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதும் அவருக்கு தெரியவில்லை. தன்னுடைய பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கிய நபர்களைப் பற்றி எங்களிடம் சொல்ல அவர் பயந்தார். அவர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்’ என தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
