'பெரிய கட்டிடத்தின் கதவை உடைத்து இளம்பெண் பார்த்த மோசமான வேலை!'.. ‘சிக்கியதும்’ தெரியவந்த ‘அதிரவைக்கும்’ தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் ஸ்டூடியோ ஒன்றுக்குள் 30 வயது இளம்பெண் ஒருவர் புகுந்து செய்த மோசமான காரியத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் Oakville நகரை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று Rockstar Games அலுவலகத்தின் ஸ்டூடியோ கதவை உடைத்து சென்று உள்ளே நுழைந்திருக்கிறார். அதன் பின்னர் அங்கு இருந்த 66 ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் எப்படியோ திருட்டு செயலில் ஈடுபட்ட இந்தப் பெண்ணை கண்டிபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளதுடன் இதுவரையில் அவர் திருடிய பொருட்களையும் அவரிடம் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் வரலாறு மலைக்க வைக்கிறது. ஆம், அந்த பெண்ணின் மீது மட்டும் இதுவரை 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் பல வழக்குகள் திருட்டு வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
