'லவ் பண்றப்போ...' 'எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா விட்டுட்டு போய்டுவியான்னு கேட்பார்...' 'அவர் எப்படி இருந்தாலும் என் காதல் குறையாது...' - கண்கலங்க வைக்கும் காதல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலர் தினத்தன்று மட்டும் தங்கள் காதலை கொண்டாடமல், தினமும் தங்கள் காதலின் மேன்மையை உணர்ந்து கொண்டாடி வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய் மற்றும் ஷில்பா தம்பதிகள்.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது விஜய் மற்றும் ஷில்பாவிற்கு காதல் மலர்ந்துள்ளது. படிப்பு முடிந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு வேலை தேடி பெங்களூருக்குச் சென்றுவிட்டு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்ததில் அவரது இரு கால்களும் துண்டாகின.
இதனால் மனமுடைந்த விஜய், ஷில்பாவின் வாழ்க்கை கஷ்டத்தில் இருக்கக்கூடாது என நினைத்து தன் தொடர்பை நிறுத்தியுள்ளார். ஷில்பாவின் வீட்டில் கடும் எதிர்ப்புக்கு பிறகும் வீட்டை விட்டு வெளியேறிய ஷில்பா 2018 மார்ச் 31 ஆம் தேதி தான் காதலித்த விஜய்யை அவர் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது இவர்களின் காதலுக்கு பரிசாக கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
தங்களின் காதல் கதையை கூறுகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் இரு கால்களை இழந்த போதே நான் திருமணம் செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக எண்ணி ஷில்பாவைத் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டேன்.
ஆனால் சில நாள்கள் கழித்து எனது நண்பர்கள் மூலம் எனக்கு ஏற்பட்ட பாதிப்பை அறிந்த ஷில்பா, என்னைத் தேடித் தனியாக வாணியம்பாடி மருத்துவமனைக்கு வந்துவிட்டார்' எனக் கூறி ஷில்பாவை பார்த்து புன்னகைத்தவாறு கூறியுள்ளார் ராஜா.
ஷில்பாவோ, நாங்கள் காதலிக்கும் போது விஜய், எனக்கு விபத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் என்னை விட்டுச் சென்று விடுவாயா என கேட்பார். ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. நான் ராஜாவைதான் காதலித்தேன். அவர் எப்படி இருந்தாலும் என் காதல் குறையவில்லை. எங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும் நாங்கள் இதேபோல் தான் இருப்போம்' எனக் கூறியுள்ளார் ஷில்பா.
தற்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றனர் ராஜா மற்றும் ஷில்பா தம்பதியினர். இந்த காதல் அனைவரையும் உருக வைத்துள்ளது.