‘விவசாயிகள் தொடர் போராட்டம்’.. சாலையில் ‘ஆணிகளை’ பதித்த டெல்லி போலீசார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி- உத்தர பிரதேச மாநில காசிபூர் எல்லையில் தடுப்புச்சுவர் அருகில் சாலையில் ஆணிகளை வைத்து டெல்லி போலீசார் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதால், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் மூன்று எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசம்-டெல்லி காசிபூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேவேளையில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தடுப்புகள் (barricades) கொண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை வன்முறை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக உள்ளனர்.
அதனால் தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி ஆணிகளை போலீசார் புதைத்து வைத்துள்ளனர். விவசாயிகள், டிராக்டர்கள் அந்த இடத்தை கடந்த வரமுடியாத அளவிற்கு போலீசார் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
