"'திருமணம்' முடிஞ்ச கையோட.. முதல் 'விசிட்' இங்க தான்..." 'சபாஷ்' போட வைத்த புது 'ஜோடி'... குவியும் 'பாராட்டு'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் முடிந்த கையுடன், புதுமண தம்பதிகள் செய்துள்ள காரியம் ஒன்று, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நல்லம்பாளையம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்த நிலையில், தற்போது ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும அதே பகுதியைச் சேர்ந்த பத்மப்ரியா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் புதுமண தம்பதிகள் நேராக, நல்லம்பாளையம் அரசு பள்ளிக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்குள்ள மைதானத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை இணைந்து நட்டனர்.
அது மட்டுமில்லாமல், இனிவரும் நாட்களில், அனைத்து மரக்கன்றுகளையும் சரிவர பராமரித்து, அதனை வளர்த்தெடுக்க உறுதுணையாக இருப்போம் என்றும் மணமக்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, திருமணம் ஆகும் தம்பதிகள் தங்களது வாழ்க்கைக்கான திட்டமிடலை மேற்கொள்ளும் நிலையில், பாலகிருஷ்ணன் - பத்மப்ரியா ஆகியோர் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, தங்களாலான ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
சமூகத்தை பேணிக் காக்க வேண்டி, புதிய உறுதிமொழியை கையில் எடுத்து அசத்திய மணமக்களுக்கு பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
