‘உங்க கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லையா..!’ ஒரு நொடி அதிர்ச்சியில் உறைய வச்ச ‘காதல் ஜோடி’-ன் போட்டோ.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்மலை உச்சியில் ஆபத்தான முறையில் நிற்பது போல காதல் ஜோடி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துருக்கியில் ஒரு காதல் ஜோடி மலை உச்சியில் நின்று கையை பிடித்தது போல் நின்று போட்டோ எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு போட்டோவுக்காக உயிரை பணயம் வைப்பதா? என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் இது போட்டோஷாப்பாக இருக்கலாம் என கூறினர்.
இந்த நிலையில் இந்த புகைப்படம் சிறிய அளவிலான Gulek castle என்ற மலை குன்றின் மேல் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்த போட்டோகிராபர், குன்றை மலை உச்சிபோல் சித்தரித்து, கீழே இருக்கும் தரைப்பகுதி தெரியாதவாறு நேர்த்தியாக எடுத்துள்ளார்.
All about the angle 😄 Reality check! pic.twitter.com/Uu27GEdcKX
— Nishal Pradhan (@pradhan_nishal) February 2, 2021
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது எங்கே எடுக்கப்பட்டது என்ற சில புகைப்படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்
